'குட் பேட் அக்லி' பட கேமியோ ரோலில் இவரா?

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' படம் வருகிற ஏப்ரல் 10-ந் தேதி வெளியாக உள்ளது.
'குட் பேட் அக்லி' பட கேமியோ ரோலில் இவரா?
Published on

சென்னை,

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்துக்கு 'குட் பேட் அக்லி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. பலரது கவனத்தையும் ஈர்த்த இந்த டீசர் 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளை கடந்த டீசர் என்ற சாதனையை படைத்திருக்கிறது. இதில் அஜித் மூன்று கதாபாத்திரங்களில் தேன்றி இருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இதற்கிடையில், நடிகை சிம்ரன் கேமியோ ரோலில் நடித்திருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தில் நடிகர் சிம்பு கேமியோ ரோலில் நடித்துள்ளார் என சமூக வலைதளங்களில் பல தகவல்கள் தீயாய் பரவி வருகின்றன. நடிகர் சிம்பு ஏற்கனவே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com