‘ஜன நாயகன்’ படம்: பூஜா ஹெக்டேவின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியீடு

விஜய்யின் "ஜனநாயகன்" படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார்.
‘ஜன நாயகன்’ படம்: பூஜா ஹெக்டேவின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியீடு
Published on

சென்னை,

தென்னிந்திய சினிமாவின் முன்னனி நடிகை பூஜா ஹெக்டே. இவர் தமிழில் 'முகமூடி, பீஸ்ட், ரெட்ரோ' ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்றார். தற்போது விஜய்யின் "ஜனநாயகன்" படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். எச்.வினோத் இயக்கி வரம் இப்படம் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் பிரியாமணி, பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகை பூஜா ஹெக்டே இன்று தனது 35வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், "ஜன நாயகன்" படக்குழு நடிகை பூஜா ஹெக்டேக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து அவரின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பூஜா ஹெக்டே "கயல்" என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com