ஷாருக்கானை பின்னுக்கு தள்ளிய கல்யாணி பிரியதர்ஷன்

கல்யாணி பிரியதர்ஷனின் ‘லோகா’ படம் ரூ 202 கோடி வசூலித்துள்ளது
ஷாருக்கானை பின்னுக்கு தள்ளிய கல்யாணி பிரியதர்ஷன்
Published on

பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் லோகா. இவர்களுடன் சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார். சாண்டியின் வில்லத்தனம் படத்திற்கு ஒரு புதிய சாயலை கொடுத்துள்ளது.

லோகா திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் பலரும் படத்தை பாராட்டி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். கல்யாணியின் நடிப்பு பலரால் பாராட்டப்படுகிறது. தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழியின் வெற்றியை தொடர்ந்து படக்குழு இப்படத்தை இந்தி மொழியில் கடந்த 5ம் தேதி வெளியிட்டனர்.

லோகா திரைப்படம் உலகளவில் ரூ 202 கோடி வசூலித்துள்ளது . வேகமாக ரூ.200 கோடி வசூல் செய்த 2 ஆவது மலையாள சினிமா என்ற சாதனையை லோகா திரைப்படம் படைத்துள்ளது.

 இந்நிலையில் கல்யாணி பிரியதர்ஷன், இந்த வாரத்திற்கான புகழ்பெற்ற இந்திய பிரபலங்களின் ஐஎம்டிபி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். ஷாருக்கான் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிர்ந்து கல்யாணி பிரியதர்ஷனை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com