கமலின் "தக் லைப்" டிரெய்லர் வெளியீடு

கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள 'தக் லைப்' படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.
Published on

சென்னை,

36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 24-ந் தேதி சென்னை சாய்ராம் கல்லூரியில் இசை வெளியிட்டு விழா நடைபெறும் என்றும் இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் லைவ் பர்பாமென்ஸ் செய்வார் எனவும் படக்குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளிட்டுள்ளது. டிரெய்லரில் சிம்பு, கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக காட்டப்படுகிறார். ஆனால் ஒரு கட்டத்தில் சிம்பு, கமல்ஹாசனின் இடத்தை பிடிக்க நினைக்கிறார்.அப்போது இருவரும் ஒருவருக்கொருவர் எதிரிகளாகி மாறி மாறி கழுத்தை நெரித்துக் கொள்ளும் காட்சி காட்டப்படுகிறது. இந்த டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியதோடு இணையத்திலும் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com