ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ்

ஜெயிலர் 2 படத்துக்கு பின்னர் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ்
Published on

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் 'வேட்டையன்' படத்திற்கு பிறகு தற்போது இயக்குனர் லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் 'கூலி' படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. அனிருத் இசையமைத்து வரும் இப்படம் ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி அல்லது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என தகவல்கள் பரவி வருகின்றன.

அதனை தொடர்ந்து ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது. இந்த படத்தின் முதல் பாகமான ஜெயிலர் மிகப்பெரும் வரவேற்பை பெற்று சுமார் ரூ.650 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

இந்த நிலையில், ரஜினியின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ரஜினியின் அடுத்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் ஏற்கனவே கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2019-ம் ஆண்டில் 'பேட்ட' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த், கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஜெயிலர் 2 படத்துக்கு பின்னர் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com