கவின், நயன்தாரா நடிக்கும் படத்தின் பெயர் அறிவிப்பு

இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது.
Kavin & Nayanthara from HI
Published on

சென்னை,

கவின், நயன்தாரா இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு ஹாய் என பெயரிடப்பட்டுள்ளது

தமிழ் திரையுலகில் "லிப்ட், டாடா, ஸ்டார் மற்றும் கிஸ்" என தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்தவர் கவின். தற்போது இவர் , லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விஷ்ணு எடவனின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது.

இந்த படத்தில் நயன்தாரா மற்றும் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வயதில் சிறியவன் தனக்கு மூத்த வயதுடைய ஒரு பெண்ணின் மீது காதலில் விழுகிறான் போன்ற கதைக்களத்தில் இப்படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு ஹாய் எனப்பெயரிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com