'குபேரா' படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதி அறிவிப்பு

குபேரா படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதியை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
'குபேரா' படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதி அறிவிப்பு
Published on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ், தற்போது இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' படத்தில் நடித்துள்ளார். இந்த படமானது மும்பை தாராவியை மையமாக வைத்து அரசியல் திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ராஷ்மிகா, ஜிம் சரப் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வருகிற ஜூன் 20-ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்த நிலையில் குபேரா படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதியை படக்குழு தற்போது அறிவித்துள்ளது. அதன்படி இந்த படத்தின் டிரெய்லர் வருகிற 13ம் தேதி (நாளை மறுநாள்) வெளியாக உள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் படக்குழுவினர் படத்தின் புரமோஷன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com