'ஜுராசிக் வேர்ல்ட் ரீபெர்த்' படத்தின் புதிய டிரெய்லர் அப்டேட்

கரேத் எட்வர்ட்ஸ் இயக்கியுள்ள 'ஜுராசிக் வேர்ல்ட் ரீபெர்த்' படம் வருகிற ஜூலை மாதம் 2-ந் தேதி வெளியாக உள்ளது.
'ஜுராசிக் வேர்ல்ட் ரீபெர்த்' படத்தின் புதிய டிரெய்லர் அப்டேட்
Published on

சென்னை,

பிரபல ஹாலிவுட் இயக்குனரும், எழுத்தாளருமானவர் டேவிட் கோப். இவர் கடந்த 1993-ம் ஆண்டு வெளியாகி உலகளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற "ஜுராசிக் பார்க்" மற்றும் அதன் தொடர்ச்சியாக 1997-ம் ஆண்டு வெளியான "ஜுராசிக் பார்க்: தி லாஸ்ட் வேர்ல்ட்" ஆகிய படங்களில் எழுத்தாளராக பணிபுரிந்திருக்கிறார்.

தற்போது இவர் 'ஜுராசிக் வேர்ல்ட்' 4-வது பாகத்திற்கான கதை எழுதியுள்ளார். இப்படத்தை காட்ஜில்லா, ராக் ஆன், தி கிரியேட்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய கரேத் எட்வர்ட்ஸ் இயக்குகிறார். யுனிவர்சல் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஜோனதன் பெய்லி, ஸ்கார்லெட் ஜொஹான்ஸ்சன், மானுவல் கார்சியா, மஹெர்ஷாலா அலி, லூனா பிளேஸ், டேவிட் ஐகோனோ ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு 'ஜுராசிக் வேர்ல்ட் ரீபெர்த்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் வருகிற ஜூலை மாதம் 2-ந் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதனை தொடர்ந்து படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் படக்குழு மற்றொரு புதிய டிரெய்லரை வெளியிட திட்டமிட்டுள்ளது. அதன்படி, வருகிற 20-ந் தேதி புதிய டிரெய்லர் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com