“பராசக்தி” ஓடிடி உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படம் வரும் ஜனவரி 14-ம் தேதி வெளியாக உள்ளது.
“பராசக்தி” ஓடிடி உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்
Published on

சென்னை,

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடித்துள்ளார். இவருடன் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

இப்படம் அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ந் தேதி பராசக்தி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் பராசக்தி படத்தில் இருந்து பர்ஸ்ட் சிங்கிள் மற்றும் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. முதல் பாடலான அடி அலையே , 2வது பாடலான ரத்னமாலா ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இது ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பராசக்தி படத்தின் ஓடிடி உரிமையை ஜீ5 நிறுவனம் ரூ 52 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி பராசக்தி உருவாகியிருப்பதால் இப்படத்தை வாங்க முன்னணி ஓடிடி நிறுவனங்கள் தயக்கம் காட்டி வந்தன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com