ரஜினிகாந்தின் டாப் 7 மாஸ் படங்கள்...எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

'கூலி' திரைப்படம் வருகிற 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும்நிலையில், ரஜினி நடித்த டாப் 7 படங்களை தற்போது காண்போம்.
Rajinikanth's top 7 mass films to watch before 'Coolie' hits theatres
Published on

சென்னை, 

தென்னிந்திய சினிமாவில் உச்சபட்ச நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பல பிளாக்பஸ்டர் படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் அவர் தற்போது நடித்துள்ள 'கூலி' திரைப்படம் வருகிற 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், அவர் நடித்த டாப் 7 மாஸ் படங்களை பற்றியும் அவை எந்த ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகின்றன என்பதை பற்றியும் தற்போது காண்போம்.

''தளபதி'', மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி, மம்முட்டி, அரவிந்த் சாமி நடித்த அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை வெங்கடேசன் தயாரிக்க, இளையராஜா இசையமைத்திருந்தார்.

''பாட்ஷா'', சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன் நடித்த அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை ஆர்.எம் வீரப்பன் தயாரிக்க, தேவா இசையமைத்திருந்தார்.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், சவுந்தர்யா உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் ''படையப்பா''. இத்திரைப்படத்தினை ஏ.எம் ரத்னம் தயாரிக்க, ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.

''சிவாஜி : தி பாஸ்'' படத்தை ஷங்கர் இயக்க, ரஜினிகாந்த், ஸ்ரேயா, விவேக், மணிவண்ணன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.

''எந்திரன்'', சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்த திரைப்படம். கலாநிதி மாறன் தயாரிக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கிய இப்படத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், சிம்ரன், திரிஷா, சசிக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார்.

நெலசன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த படம் ஜெயிலர். கலாநிதி மாறன் தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com