இறுதிகட்ட படப்பிடிப்பில் சிவகார்த்திகேயனின் "மதராஸி"

‘மதராஸி’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இறுதிகட்ட படப்பிடிப்பில் சிவகார்த்திகேயனின் "மதராஸி"
Published on

சென்னை,

இன்று தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அமரன் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமான 'மதராஸி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைத்திருக்கிறார்.

சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு 'எஸ்கே23' படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த படத்திற்கு தமிழில் 'மதராஸி' என்றும் இந்தியில் 'தில் மதராஸி' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. திரைப்படத்தின் ஆடியோ உரிமையை ஜங்கிலி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது.

'மதராஸி' திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த தேதியில்தான் கடந்த ஆண்டு விஜய் நடித்த 'தி கோட்' திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

படத்தின் இறுதிக்கட்ட காட்சியை இலங்கையில் படக்குழு எடுக்க திட்டமிட்டுள்ளது. அங்கு 15 முதல் 20 நாட்கள் வரை படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. அதற்காக படக்குழு தற்பொழுது இலங்கைக்கு சென்றுள்ளனர். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com