"குழந்தையின் சாபம் உன்னை விடாது"- மாதம்பட்டி ரங்கராஜின் 2-வது மனைவி பரபரப்பு பதிவு

ஜாய்கிறிஸ்டில்டா தனது சமூக வலைதள பக்கத்தில் பரபரப்பு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
"குழந்தையின் சாபம் உன்னை விடாது"- மாதம்பட்டி ரங்கராஜின் 2-வது மனைவி பரபரப்பு பதிவு
Published on

சென்னை,

ஜில்லா, வேலைக்காரன், மெர்சல் போன்ற படங்களில் ஆடை வடிவமைப்பா ளராக பணியாற்றியவர் ஜாய்கிறிஸ்டில்டா. இவருக்கும் பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜுக்கும் பழக்கம் ஏற்பட்டது. மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் ஜாய்கிறிஸ் டில்டாவுடன் 2-வது திருமணம் ஆனது.

இந்த தகவலை ஜாய்கி றிஸ்டில்டா வெளிப்படுத்தி கர்ப்பம் அடைந்திருப்பதாகவும் அறிவித்தார். இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி விட்டதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவ லகத்தில் ஜாய்கிறிஸ்டில்டா புகார் அளித்தார்.

புகார் மனுவில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டார். என்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ் தான் பொறுப்பு என கூறியிருந்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்த தொடங்கி இருக்கின்றனர். கடந்த வாரம் ஜாய்கிறிஸ்டில்டாவிடம் போலீசார் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். விரைவில் மாதம்பட்டி ரங்கராஜிடமும் போலீசார் விசாரணை நடத்த இருக்கின்றனர்.

இந்நிலையில் ஜாய்கிறிஸ்டில்டா நேற்றுமுன்தினம் தனது சமூக வலைதள பக்கத்தில் பரபரப்பு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது பதிவில், ஒருத்தன் குற்ற உணர்ச்சியே இல்லாமல் அலைகிறான்... பெருமையாக தலையெழுப்பிக்கிட்டு நடக்கிறான். நீ உன்னை ஒரு உத்தமன் போலே காட்டிக் கொண்டு சுற்றிக்கிட்டே இருக்கிறாய். உன்னைப்போன்ற மனிதாபிமானம் இல்லாத ஒருவனை யாரும் பார்த்திருக்க முடியாது.

நீங்க ஓடினாலும் சரி, ஒளிந்தாலும் சரி கருவில் இருக்கும் உன் குழந்தையின் சாபம் உன்னை நிழலாகவே தொடரும். ஒரு நாளும் உன்னை விட்டு போகாது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். ஜாய்கிறிஸ்டில்டாவின் கருத்துக்கள் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com