ஓ.டி.டி.யிலும் மக்களின் கவனத்தை ஈர்த்த 'குடும்பஸ்தன்' படம்

மணிகண்டன் நடிப்பில் வெளியான 'குடும்பஸ்தன்' படம் திரையரங்களை தொடர்ந்து ஓ.டி.டி.யிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஓ.டி.டி.யிலும் மக்களின் கவனத்தை ஈர்த்த 'குடும்பஸ்தன்' படம்
Published on

தமிழ் சினிமாவில் 'ஜெய் பீம், லவ்வர், குட் நைட்' போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் மணிகண்டன். இவரது நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 24-ந் தேதி வெளியான படம் 'குடும்பஸ்தன்'. இப்படத்தை சினிமாக்காரன் நிறுவனம் தயாரிப்பில் நக்கலைட்ஸ் யூடியூப் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் மணிகண்டன் உடன் இணைந்து சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு வைஷாக் இசையமைத்துள்ளார்.

மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் சுவாரசியுங்கள் என அனைத்தையும் இந்த திரைப்படத்தில் காட்சிப்படுத்தி இருக்கின்றனர். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

திரையரங்கில் மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து ஜீ 5 ஓ.டி.டி தளத்தில் கடந்த 7-ந் தேதி வெளியானது. தற்போது அங்கும் தனது வெற்றியை பதிவு செய்து மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.. அதாவது, இப்படம் ஓ.டி.டி.யில் 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இதனை ஜீ 5 நிறுவனமே தனது எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com