எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

தேசிய விருது வென்றுள்ள எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
Published on

71-வது தேசிய திரைப்பட விருதுகளில் 'பார்க்கிங்' படத்துக்காக எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு திரையுலக பிரபலங்கள் எம்.எஸ்.பாஸ்கருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தேசிய விருது வென்றிருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

'கிராண்ட் பாதர்' என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை ப்ராங்க் ஸ்டார் ராகுல் இயக்கி, அதில் எம்.எஸ்.பாஸ்கருக்கு பேரனாகவும் நடித்து வருகிறார். இப்படத்தை குட்டி ஸ்டோரிஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் மூலமாக ப்ராங்க் ஸ்டார் ராகுல் இயக்குநராக அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது.

எம்.எஸ்.பாஸ்கர், ப்ராங்க் ஸ்டார் ராகுல் ஆகியோருடன் ஸ்மீகா, அருள் தாஸ், முனீஸ்காந்த் ,ஸ்ரீநாத் ,சிவா அரவிந்த் , பிரியதர்ஷினி , அஞ்சலி ராவ் , அபிநயா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்கிறார். திவாகர் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க கலை இயக்கத்தை பிரேம் மேற்கொள்கிறார்.

காமெடி கலந்த ஹாரர் பேண்டஸி படமாக தயாராகி வரும் இதனை புவனேஷ் சின்னசாமி தயாரித்து வருகிறார். மெட்ரோ முரளி மற்றும் மெட்ரோ கிரி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகி இருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com