'விடாமுயற்சி படத்தில் பஞ்ச் டயலாக்குகள் இல்லை' - மகிழ் திருமேனி

இப்படத்தில் பஞ்ச் டயலாக்குகள் இல்லை என்று புரமோஷனின்போது இயக்குனர் மகிழ் திருமேனி கூறி இருக்கிறார்.
This star hero’s film will not have punch dialogues & massy interval block
Published on

சென்னை,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்துள்ளார். மகிழ்த்திருமேனி இயக்கிய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் அடுத்த மாதம் 6ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் பஞ்ச் டயலாக்குகள் இல்லை என்று புரமோஷனின்போது இயக்குனர் மகிழ் திருமேனி கூறி இருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில்,

'இது ஒரு அற்புதமான படம். ஆனால் விடாமுயற்சியில் பஞ்ச் டயலாக்குகள் இல்லை. அஜித் சாருக்கு பிரமாண்டமாக என்ட்ரி காட்சியும் கிடையாது. ஹீரோயிசம் மற்றும் மாஸ்க்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமும் கிடையாது. அப்படியிருந்தும் விடாமுயற்சி ரசிகர்கள் உட்பட அனைவரையும் கவரும் என்பதில் உறுதியாக உள்ளேன். ' என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com