"தக் லைப்" படத்தின் 2வது பாடல் அப்டேட்

கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள 'தக் லைப்' படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.
"தக் லைப்" படத்தின் 2வது பாடல் அப்டேட்
Published on

சென்னை,

36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.

'தக் லைப்' படத்தின் முதல் பாடலான 'ஜிங்குச்சா' வெளியாகி மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படத்தின் 'ஜிங்குச்சா' பாடல் யூடியூபில் 2 கோடி பார்வைகளை கடந்துள்ளது. இப்பாடலை கமல்ஹாசன் வரிகளில் ஆதித்யா, வைஷாலி சமந்த், சக்தி ஸ்ரீ கோபாலன் இணைந்து பாடியுள்ளனர்.

வருகிற மே 16-ந் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் 'தக் லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து மெலோடி பாடல் ஒன்று வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இந்த பாடல் வருகின்ற மே மாதம் 7ம் தேதி வெளியாகும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com