மீண்டும் இணையும் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா கூட்டணி

மூன்றாம் முறையாக விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மீண்டும் இணையும் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா கூட்டணி
Published on

சென்னை,

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர், நடிகையாக வலம் வருபவர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் ஏற்கனவே 'கீதம் கோவிந்தம், டியர் காம்ரேட்' ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

தற்போது மூன்றாம் முறையாக விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, 'ஷியாம் சிங்கா ராய்' பட இயக்குனர் ராகுல் சங்கிரித்யன் இயக்க உள்ள படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்க உள்ளார். அந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்தில் துவங்க உள்ளதாக தெரிகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com