ஓடிடியில் வெளியாகும் 'தி கிரேட் பிரீ-வெடிங் ஷோ'...எப்போது, எதில் பார்க்கலாம்?

ராகுல் ஸ்ரீனிவாஸ் இயக்கிய இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
OTT: Thiruveer’s Recent Hit The Great Pre-Wedding Show Locks Streaming Date
Published on

சென்னை,

கடந்த7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, அதன் நகைச்சுவைக்காக நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 'தி கிரேட் பிரீ-வெடிங் ஷோ'. ராகுல் ஸ்ரீனிவாஸ் இயக்கிய இந்தப் படத்தில் திருவீர் மற்றும் டீனா ஸ்ராவ்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

கடந்த 14-ம் தேதி இப்படம் தமிழ் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளது. அதன்படி, இப்படம் ஜீ5-யில் டிசம்பர் 5 முதல் ஸ்ட்ரீமிங் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்டர் ரோஹன், நரேந்திர ரவி, யாமினி நாகேஸ்வர் மற்றும் பலர் துணை வேடங்களில் நடித்திருக்கிறார்கள். சுரேஷ் பொப்பிலி இசையமைக்க, சந்தீப் அகரம் மற்றும் அஷ்மிதா ரெட்டி பசானி ஆகியோர் இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com