திருவண்ணாமலையில் ஆடிப்பூர பிரம்மோற்சவ திருவிழா - கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருவண்ணாமலை கோவிலில் உள்ள உண்ணாமலை அம்மன் சன்னதியில் கொடியேற்றம் நடந்தது.
திருவண்ணாமலையில் ஆடிப்பூர பிரம்மோற்சவ திருவிழா - கொடியேற்றத்துடன் தொடக்கம்
Published on

திருவண்ணாமலை,

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் கார்த்திகை தீப திருவிழா, ஆனி பிரம்மோற்சவம், ஆடிப்பூர பிரம்மோற்சவம் என பல்வேறு நிகழ்ச்சி நடைபெறும். இந்த ஆண்டிற்கான ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா இன்று(சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இன்று காலை சுமார் 6.30 மணியில் இருந்து 8 மணிக்குள் உண்ணாமலை அம்மன் சன்னதியின் முன்பு உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி அம்மனுக்கான விழா என்பதால் உண்ணாமலை அம்மன் சன்னதியில் கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கெண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆடி பிரமோற்சவத்தின் 10-ம் நாளான 28-ந்தேதி பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவமும், இரவு தீமிதி திருவிழாவும் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து அன்று இரவு 12 மணிக்கு மேல் உண்ணாமலை அம்மன் சன்னதி முன்புறம் தீமிதி விழாவும், பின்னர் அம்மன் வீதியுலாவும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் பரணிதரன் மற்றும் அலுவலர்கள், விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com