போகர் ஜெயந்தி விழா: பழனி முருகன் கோவிலில் மரகத லிங்கத்துக்கு சிறப்பு பூஜை

பழனியில் முருகப்பெருமானை தரிசனம் செய்த பின்பு பக்தர்கள் போகர் பெருமானை தரிசிப்பது வழக்கம்.
போகர் ஜெயந்தி விழா: பழனி முருகன் கோவிலில் மரகத லிங்கத்துக்கு சிறப்பு பூஜை
Published on

பழனி முருகன் கோவிலின் மூலவர் சிலையை 18 சித்தர்களில் ஒருவரான போகர் பெருமான் நவபாஷாணத்தால் உருவாக்கினார் என்பது ஆன்மிக வரலாறு. இதை பிரதிபலிக்கும் வகையில் பழனி முருகன் கோவில் உட்பிரகாரத்தில் போகருக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு புலிப்பாணி ஆசிரம நிர்வாகம் சார்பில் பூஜை செய்யப்பட்டு வருகிறது. பழனி முருகப்பெருமானை தரிசனம் செய்த பின்பு பக்தர்கள் போகர் பெருமானை தரிசிப்பது வழக்கம்.

போகர் சன்னதியில் பிரசித்தி பெற்ற மரகத லிங்கம் உள்ளது. ஆண்டுதோறும் வைகாசி மாத பரணி நட்சத்திர நாளன்று போகர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் இந்த மரகத லிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு போகர் ஜெயந்தியையொட்டி இன்று பழனி கோவில் போகர் சன்னதியில் உச்சிக்கால வேளையில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

முன்னதாக சன்னதி மண்டபம் முன்பு மரகத லிங்கம் வைக்கப்பட்டு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com