திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 29-ம் தேதி கருட பஞ்சமி விழா

மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி, நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாகச் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 29-ம் தேதி கருட பஞ்சமி விழா
Published on

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கருட பஞ்சமி ஒவ்வொரு ஆண்டும் கேலாகலமாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான கருட பஞ்சமி விழா வரும் 29-ம் தேதி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது.

அன்றைய தினம் மலையப்ப சுவாமி தனது விருப்பமான கருட வாகனத்தில் எழுந்தருளி, மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாகச் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பகவானை தரிசனம் செய்ய உள்ளனர்.

கருட பஞ்சமியில் சுவாமியை தரிசித்தால், புதுமணத் தம்பதிகளின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும், குழந்தைகள் வலிமையாகவும், கருடனைப் போல நல்ல ஆளுமை கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்பது நம்பிக்கை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com