விடுமுறை தினம்: திருச்செந்தூரில் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

வாரவிடுமுறை தினத்தையொட்டி இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலில் குவிந்தனர்.
விடுமுறை தினம்: திருச்செந்தூரில் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
Published on

தூத்துக்குடி,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல் திருவிழா மற்றும் சில முக்கிய தினங்கள், விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.

இந்த நிலையில் விடுமுறை தினத்தையொட்டி இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலில் குவிந்தனர். கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

இதனால் பொது தரிசன வரிசை, 100 ரூபாய் கட்டண தரிசன வரிசை செல்லக்கூடிய வரிசை என அனைத்து வழிகளிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com