நத்தம் அருகே முத்தாலம்மன் கோவில் திருவிழா

திருவிழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.
நத்தம் அருகே முத்தாலம்மன் கோவில் திருவிழா
Published on

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோட்டையூர் கிராமம் நல்லூர்-குரும்பபட்டியில் மந்தை முத்தாலம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக, நேற்று இரவு முத்தாலம்மன் தீவட்டி, பரிவாரங்கள், வாணவேடிக்கைகளுடன் ஊர்வலமாக மேளதாளம் முழங்க கோவில் முன் உள்ள மந்தைக்கு சென்றடைந்தார்.

பின்னர் கோவிலுக்குள் சென்ற அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் பால்குடம் சுமந்து வந்தும், மாவிளக்கு எடுத்தும், கிடா வெட்டியும் நேர்த்திக்கடன்களை செலுத்தினர். விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இன்று மாலை வர்ணக் குடைகளுடன் பக்தர்கள் புடைசூழ அம்மன் பூஞ்சோலை சென்றடைகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com