நாகை வெளிப்பாளையம் காளியம்மன் கோவில் தேரோட்டம்

சிறப்பு மலர் அலங்காரத்துடன் தேரில் எழுந்தருளிய காளியம்மன், முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நாகை வெளிப்பாளையம் காளியம்மன் கோவில் தேரோட்டம்
Published on

நாகை வெளிப்பாளையம் காளியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 18- ந் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

இதில் கலந்துகொண்ட திரளான பக்தர்கள் பூத்தட்டுகளை கையில் ஏந்தியபடி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. விழா நாட்களில் குதிரை, சிம்மம், ரிஷபம், கிளி உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக காளியம்மன் சிறப்பு மலர் அலங்காரத்துடன் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து காலை 10 மணியளவில் தேர் வடம் பிடிக்கப்பட்டது. தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com