திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமி கருட சேவை

மலையப்பசாமி தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமி கருட சேவை
Published on

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை தங்கக் கருட வாகன வீதிஉலா (கருடசேவை) நடைபெறுவது வழக்கம். உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

அதன்படி, பவுர்ணமி தினமான நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று இரவு 7 முதல் 9 மணி வரை பவுர்ணமி கருடசேவை நடந்தது. அதையொட்டி உற்சவர் மலையப்பசாமி தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com