தங்கம் விலை உயர்வு... இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது.
தங்கம் விலை உயர்வு... இன்றைய நிலவரம் என்ன?
Published on

சென்னை,

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது. பல்வேறு நாடுகளுக்கு இடையே திடீரென ஏற்படும் போர் பதற்றம் காரணமாகவும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து பின்னர் கணிசமாக குறைந்தது.

அந்த வகையில், கடந்த மாதம் 14-ந் தேதி வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,320-க்கும், ஒரு சவரன் ரூ.74,560-க்கும் விற்பனையானது. அதன் பின்னர் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது.

இந்த சூழலில் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,180-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.126-க்கும், ஒரு கிலோ ரூ. 1 லட்சத்து 26 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

21.07.2025 ஒரு சவரன் ரூ. 73,440 (இன்று)

19.07.2025 ஒரு சவரன் ரூ. 73,360 (நேற்று முன்தினம்)

18.07.2025 ஒரு சவரன் ரூ. 72,880

17.07.2025 ஒரு சவரன் ரூ. 72,840

16.07.2025 ஒரு சவரன் ரூ. 72,800

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com