வரலாற்றில் முதல் முறை.. புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை..! இல்லத்தரசிகள் அதிர்ச்சி

ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தில் விலை ரூ.10 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
வரலாற்றில் முதல் முறை.. புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை..! இல்லத்தரசிகள் அதிர்ச்சி
Published on

சென்னை,

தங்கம் விலை கடந்த மாதம் (ஆகஸ்ட்) 26-ந்தேதியில் இருந்து கிடுகிடுவென உயர்ந்து வந்தது. அதிலும் கடந்த மாதம் 29-ந்தேதியில் இருந்து ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தில் தங்கம் விலை இருந்தது. அந்த வகையில் கடந்த 4-ந்தேதி வரலாறு காணாத வகையில் ஒரு சவரன் ரூ.78 ஆயிரத்தை தாண்டியது.

9 நாட்களுக்கு பிறகு நேற்று முன் தினம் தங்கம் விலை சற்று குறைந்தது. அதனை தொடர்ந்து நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை பதிவு செய்தது. அதாவது, சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.78,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ரூ.9,865-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இதுவரை இல்லாத வகையில், வரலாற்றில் முதல் முறையாக ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.80 ஆயிரத்தை கடந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.10 ஆயிரத்தை கடந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.80,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிராமுக்கு ரூ.240 உயர்ந்து, ரூ.10,005-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த ஒரு வாரத்தில் ரூ.5 ஆயிரம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் மற்றும் இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com