தொடர் சரிவில் தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது..!

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்துக்கு வந்தது.
தொடர் சரிவில் தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது..!
Published on

சென்னை,

தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்சத்தை தொட்டது. பின்னர் மளமளவென சரிந்தது. இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக பெரிய அளவில் விலையில் மாற்றம் இல்லாமல், ஏற்ற-இறக்கத்துடனேயே நீடிக்கிறது.

அந்த வகையில் கடந்த 1-ந்தேதி முதல் விலை உயர்ந்து வந்து, நேற்று குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 350-க்கும், ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்து 800-க்கும் விற்பனையானது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 250-க்கும், ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து விலை அதிகரித்து, பின்னர் குறைந்து கடந்த 28-ந்தேதி ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்துக்கு கீழ் வந்து மீண்டும் ஏற்றம் கண்டது. அதேபோல் தற்போது விலை சரிந்து, ரூ.90 ஆயிரத்துக்கு வந்துள்ளது. வரும் நாட்களிலும் மேலும் குறையுமா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

வெள்ளி விலையும், தங்கம் விலையை போலவே ஏறுவதும், இறங்குவதுமான சூழல் நிலவுகிறது. அதன்படி, நேற்று கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.

இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை சரிவை சந்தித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,180-க்கும், சவரன் ரூ.89,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல, வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. இதன்படி வெள்ளிவிலை கிராமுக்கு ரூ.2 குறைந்து, ஒரு கிராம் ரூ.163க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 63 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

05.11.2025 ஒரு சவரன் ரூ.89,440 (இன்று)

04.11.2025 ஒரு சவரன் ரூ.90,000 (நேற்று)

03.11.2025 ஒரு சவரன் ரூ.90,800

02.11.2025 ஒரு சவரன் ரூ.90,480

01.11.2025 ஒரு சவரன் ரூ.90,480

31.10.2025 ஒரு சவரன் ரூ.90,400   

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com