காலையில் உயர்ந்து, மாலையில் குறைந்த தங்கம் விலை... நிலவரம் என்ன...?

ஒரு கிராம் தங்கம் ரூ. 12 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
காலையில் உயர்ந்து, மாலையில் குறைந்த தங்கம் விலை... நிலவரம் என்ன...?
Published on

சர்வதேச அரசியல் சூழ்நிலையால் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. நடப்பு ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் ரூ. 60 ஆயிரமாக இருந்த தங்கம் விலை தற்போது ரூ. 95 ஆயிரத்தை கடந்து சென்றுள்ளது.

இதனிடையே, சென்னையில் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ. 2 ஆயிரத்து 80 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 97 ஆயிரத்து 440க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ. 260 அதிகரித்து ரூ. 12 ஆயிரத்து 180க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், காலை அதிகரித்த தங்கம் விலை மாலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று மாலை ஒரு சவரன் தங்கம் ரூ. 1 ஆயிரத்து 440 குறைந்து ரூ. 96 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் ரூ. 180 குறைந்து ரூ. 12 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com