கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.
கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
Published on

மும்பை,

ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது. இந்த வரி விதிப்பு நாளை முதல் அமலாகும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பால் இந்திய பங்குச்சந்தை இன்று (26.08.2025 - செவ்வாய்கிழமை) கடும் சரிவை சந்தித்தது. அதன்படி, 255 புள்ளிகள் சரிந்த நிப்டி 24 ஆயிரத்து 712 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 688 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 54 ஆயிரத்து 450 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது

அதேபோல், 354 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த பின்நிப்டி 25 ஆயிரத்து 952 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 849 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 80 ஆயிரத்து 786 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது

281 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 671 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 768 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 60 ஆயிரத்து 695 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com