

ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. யூனியன் பிரதேசத்தின் ஒருசில பகுதிகளில் மேகவெடிப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தோடா மற்றும் கிருஷ்ட்வர் மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர். கனமழை தொடர்ந்து பெய்துவருவதால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்புப்பணியில் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.