சூனியம் செய்வதாக சந்தேகித்து பெண்ணை எரித்துக்கொன்ற 23 பேருக்கு ஆயுள் தண்டனை - அசாம் கோர்ட்டு தீர்ப்பு

3 ஆண்டுகளாக நடந்த விசாரணை முடித்து நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
சூனியம் செய்வதாக சந்தேகித்து பெண்ணை எரித்துக்கொன்ற 23 பேருக்கு ஆயுள் தண்டனை - அசாம் கோர்ட்டு தீர்ப்பு
Published on

திப்ரூகர்,

அசாமின் சரைதியோ மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவரை கடந்த 2012-ம் ஆண்டு ஒரு கும்பல் சித்ரவதை செய்து எரித்துக்கொன்றது. தங்களுக்கு எதிராக அவர் சூனியம் செய்வதாக சந்தேகப்பட்டு இந்த கொடூரத்தை நிகழ்த்தியது.

இந்த பாதக செயலை செய்த 11 பெண்கள் உள்பட 23 பேர் கொண்ட அந்த கும்பலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. 13 ஆண்டுகளாக நடந்த விசாரணை முடித்து நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இதில் 23 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபாரதமும் விதித்து நீதிபதி அபுபக்கர் சித்திக்கு தீர்ப்பு அளித்தார். மேலும் கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்கவும் குற்றவாளிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com