டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 400-ஆக பதிவு - மக்கள் அவதி

டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 400-ஆக பதிவு - மக்கள் அவதி
Published on

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் குளிர்காலத்தில் காற்று மாசு அதிகரிப்பது வழக்கம். இந்த ஆண்டும் காற்று மாசு தீபாவளிக்கு பிறகு மிக அதிகமாகவே இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த செயற்கை மழையை வர வைக்கலாம் என்ற யோசனையின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட திட்டம் தோல்வியில் முடிந்தது. அது பற்றிய மறு ஆய்வுகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், டெல்லியின் பல இடங்களில் காற்றுத்தர அளவுக் குறியீட்டில் மோசமான நிலையை காட்டின. பொதுவாக 100-க்கு மேல் சென்றாலே அது மிதமான நிலையை தாண்டி மோசமான நிலைக்கு கொண்டு செல்கிறது என்று அர்த்தம். ஆனால் டெல்லியில் இன்று காற்றின் தரக் குறியீடு 400க்கு மேல் பதிவாகி, மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகள் புகை மூட்டம் சூழ்ந்து காட்சியளித்தது. காற்று மாசு அதிகரித்ததன் காரணமாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் மக்கள் அவதியடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com