பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் வங்கியில் ரூ. 40 லட்சம் கொள்ளை

போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் வங்கியில் ரூ. 40 லட்சம் கொள்ளை
Published on

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் கபூர்தலா மாவட்டம் ரஹானா ஜட்டன் கிராமத்தில் வங்கி உள்ளது. பஹ்வாரா - ஹொசிர்பூர் நெடுஞ்சாலையில் இந்த வங்கி அமைந்துள்ளது.

இந்நிலையில், இந்த வங்கியில் இன்று ஊழியர்கள் வழக்கமான பணியை மேற்கொண்டிருந்தனர். வாடிக்கையாளர்களும் பணத்தை எடுப்பது, டெபாசிட் செய்வது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, காரில் வந்த 3 பேர் கும்பல் துப்பாக்கியுடன் வங்கிக்குள் நுழைந்தது. வங்கி மேலாளர், ஊழியர்கள், வாடிக்கையாளர்களை துப்பாக்கி முனையில் மிரட்டிய கும்பல் வங்கியில் இருந்து ரூ. 40 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com