முதல்-மந்திரியின் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

அரியானாவில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது.
முதல்-மந்திரியின் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
Published on

சண்டிகர்,

அரியானாவில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்-மந்திரியாக நயாப் சிங் சைனி செயல்பட்டு வருகிறார். அம்மாநில தலைநகர் சண்டிகரில் தலைமை செயலகம், முதல்-மந்திரி அலுவலகம் உள்ளது.

இந்நிலையில், சண்டிகரில் உள்ள முதல்-மந்திரி அலுவலகத்திற்கு இன்று மாலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சண்டிகர் போலீசாருக்கு வந்த தொலைபேசி அழைப்பில் முதல்-மந்திரி அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக நபர் மிரட்டல் விடுத்தார்.

இதையடுத்து, மோப்ப நாய் உதவியுடன், போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் தலைமை செயலகத்திலும், முதல்-மந்திரி அலுவலகத்திலும் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com