ஜனாதிபதி உரையுடன் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்கம்

ஜனாதிபதி உரையுடன் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது.
ஜனாதிபதி உரையுடன் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்கம்
Published on

டெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறுகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி உரையுடன் இந்த தொடர் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் 2025-26ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் இன்று தொடங்கியுள்ளது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அடங்கிய கூட்டுக்கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கியுள்ளது. ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. ஜனாதிபதி முர்மு பட்ஜெட் கூட்டத்தொடரில் உரையாற்றி வருகிறார்.

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியதாவது;-

அரசியலமைப்பு சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75வது ஆண்டு நிறைவடைந்ததை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நாம் கொண்டாடினோம். கடந்த சில நாட்களுக்குமுன் அரசியலமைப்பு சாசனம் 75 ஆண்டுகள் பயணத்தை நிறைவு செய்ததை கொண்டாடினோம். ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்காக அம்பேத்கர் மற்றும் அரசியல் அமைப்பு சாசன குழு உறுப்பினர்களுக்கு நான் தலைவணங்குகிறேன். ஒரே நாடு ஒரே தேர்தல், வக்பு சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இளைஞர்களுக்கு கல்வியை அளிப்பதிலும், அவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் எனது அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது' என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com