வைர வியாபாரி மெகுல் சோக்சிக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்க சி.பி.ஐ. மனு

மெகுல் சோக்சிக்கு எதிரான வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
வைர வியாபாரி மெகுல் சோக்சிக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்க சி.பி.ஐ. மனு
Published on

மும்பை,

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரத்து 500 கோடி மோசடியில் ஈடுபட்டதாக வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்சி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நிரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டு அங்குள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் பெல்ஜியம் நாட்டில் மெகுல் சோக்சி கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நாடு கடத்தும் நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் கனரா வங்கியில் ரூ.55.27 கோடி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக மெகுல் சோக்சிக்கு எதிரான வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் மெகுல் சோக்சிக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பிக்க மும்பை சிறப்பு கோர்ட்டில் சி.பி.ஐ. மனுதாக்கல் செய்தது. மனுவை விசாரித்த நீதிபதி வி.பி. தேசாய் குறிப்பிட்ட வழக்கு தொடர்பாக சிறப்பு கோர்ட்டு விசாரிக்க முடியாது எனக்கூறினார். மேலும் மனுவை மாஜிஸ்திரேட்டு கோட்டு விசாரிக்க அனுப்பி வைத்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com