ரூ.2,000 கோடி வங்கி மோசடி குற்றச்சாட்டு: அனில் அம்பானி மறுப்பு

தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் அனில் அம்பானி மறுத்துள்ளார்.
ரூ.2,000 கோடி வங்கி மோசடி குற்றச்சாட்டு: அனில் அம்பானி மறுப்பு
Published on

பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்.பி.ஐ.) பிரபல தொழில் அதிபர் அனில் அம்பானி செய்த முறைகேடுகளால் ரூ.2 ஆயிரத்து 929 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் 13-ந்தேதி அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனத்தை மோசடி நிறுவனம் என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்தது.இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி, சி.பி.ஐ.யில் புகார் அளித்தது. அந்த புகாரில், " ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனம் பல்வேறு வங்கிகளுக்கு ரூ.40 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் நிலுவை வைத்து உள்ளது. இதில் ஸ்டேட் வங்கிக்கு மட்டும் ரூ.2 ஆயிரத்து 929.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது " என கூறப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக சி.பி.ஐ. ரிலையன்ஸ் கம்யூனிகேசன் மற்றும் அதன் நிறுவனர் அனில் அம்பானி மீது குற்றச்சதி, மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.

ரிலைன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனம் ஸ்டேட் வங்கியில் இருந்து கடன் வாங்கி அதை தவறாக பயன்படுத்தியதாக சி.பி.ஐ. தரப்பில் கூறப்படுகிறது.

இந்தநிலையில் வழக்கு தொடர்பாக காலை மும்பையில் உள்ள அனில் அம்பானியின் வீட்டில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தினர். சோதனைக்காக 7 முதல் 8 அதிகாரிகள் காலை 7 மணியளவில் கப்பரேடு பகுதியில் உள்ள அனில் அம்பானியின் ' சீவின்டு ' வீட்டுக்கு சென்றனர். அப்போது வீட்டில் அனில் அம்பானி, அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதேபோல சி.பி.ஐ அதிகாரிகள் ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனத்தின் அலுவலகத்திலும் சோதனை நடத்தினர். சமீபத்தில் அனில் அம்பானி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வங்கி மோசடி வழக்கில் தொழில் அதிபர் அனில் அம்பானி வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் அனில் அம்பானி மறுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com