கள்ளக்காதலனுடன் உல்லாசம்: வெளியே சொன்னால் வெட்டி டிரம்மில் அடைத்து விடுவேன்- காதல் கணவரை எச்சரித்த மனைவி

கேள்வி கேட்ட கணவரை தாக்கி விட்டு மாயா நகை,பணத்துடன் தலைமறைவானார்.
கள்ளக்காதலனுடன் உல்லாசம்: வெளியே சொன்னால் வெட்டி டிரம்மில் அடைத்து விடுவேன்- காதல் கணவரை எச்சரித்த மனைவி
Published on

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த சவுரவ் சுக்லா என்பவரை அவரது மனைவி முஸ்கான் ரஸ்தோகி மற்றும் அவரது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்து தண்ணீர் நிரப்பி வைக்கப்படும் பிளாஸ்டிக் டிரம்மில் அடைத்து வைத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்தவகையில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை அதிகமாக பேசினால் மீரட் படுகொலை போன்றே உன்னையும் வெட்டி டிரம்மில் அடைத்து விடுவேன் என மிரட்டி உள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் கோண்டா பகுதியை சேர்ந்தவர் என்ஜீனியரான தரேந்திர குஷ்வாஹா (27), இவரும் பஸ்தி மாவட்டத்தை சேர்ந்த மாயா மவுரியா ( 27) என்பவரும் கடந்த 2016-ம் ஆண்டு உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். என்ஜீனியர் தர்மேந்திர குஷ்வாஹா தனது மனைவி பெயரில் ஆசைஆசையாக ஒரு நிலத்தை வாங்கி வீடு கட்டுவதற்கான ஒப்பந்தத்தை தனது உறவினரான நீரஜ் மவுரியாவிடம் கொடுத்துள்ளார். வீடு கட்டும் சாக்கில் மாயா மவுரியாவிடம் அவ்வப்போது நெருங்கி பழகி வந்துள்ளார் நீரஜ் மவுரியா (28). இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இருவரும் உல்லாசமாக இருந்ததை பார்த்து தரேந்திர குஷ்வாஹா அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் மனைவியிடம் கேட்டபோது அவரும் நீரஜும் சேர்ந்து தர்மேந்திர குஷ்வாஹாவை தாக்கி உள்ளனர். மேலும் மாயா வீட்டில் இருந்து நகை,பணத்துடன் தலைமறைவானார்.

இது தொடர்பாக குஷ்வாயா போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் மாயா வீட்டுக்கு வந்தார். அப்போது தர்மேந்திர குஷ்வாஹா மற்றும் அவரது தாய் ஆகியோரை மாயா மவுரியாவும் நீரஜும் சேர்ந்து தாக்கி உள்ளனர். மேலும் தர்மேந்திர குஷ்வாஹாவை பார்த்து நீ அதிகமாக பேசினால் இது குறித்து வெளியே தெரிவித்தால் உன்னை மீரட் படுகொலை போல வெட்டி டிரம்மில் அடைத்துவிடுவேன் என மாயா மிரட்டி உள்ளார்.

இதற்கிடையே தனது கணவர் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவதாகவும் அவர் தன்னை 4 முறை கருக்கலைப்பு செய்ய கட்டாயப்படுத்தியதாகவும் மாயா கூறினார். இரு தரப்பு புகார்களின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், மாயா தர்மேந்திர குஷ்வாஹாவை மிரட்டிய சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com