டெல்லியில் அடர்பனி சூழல்; ரெயில்கள் காலதாமதம்

டெல்லியில் அடர்பனியான சூழலால் பல ரெயில்கள் காலதாமதத்துடன் இயக்கப்பட்டு வருகின்றன.
டெல்லியில் அடர்பனி சூழல்; ரெயில்கள் காலதாமதம்
Published on

புதுடெல்லி,

டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் காலை முதல் அடர்பனியான சூழல் நிலவுகிறது. பல்வேறு இடங்களிலும் பனி மூட்டம் காணப்படுகிறது. கடும் பனியால் குளிரான காலநிலையும் உள்ளது. இதனால், காலையில் வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் அதிக சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் வந்தே பாரத், ஷதாப்தி மற்றும் ஹம்சபர் உள்ளிட்ட ரெயில்கள் காலதாமதத்துடன் இயங்குகின்றன. பல்வேறு நகரங்களில் இருந்து டெல்லிக்கு சென்று சேரும் ரெயில்களும் பல மணிநேர காலதாமதத்துடன் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், ரெயில் பயணிகள் பாதிப்புக்குள்ளானார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com