குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி: தம்பதி உயிரிழப்பு, பிள்ளைகளுக்கு தீவிர சிகிச்சை

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றன
குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி: தம்பதி உயிரிழப்பு, பிள்ளைகளுக்கு தீவிர சிகிச்சை
Published on

காந்திநகர்,

குஜராத் மாநிலம் சபர்கந்தா மாவட்டம் வாடலி பகுதியை சேர்ந்தவர் வினு சாகர் (வயது 42). இவரது மனைவி கோகிலாபென் (வயது 40). இந்த தம்பதிக்கு 19 வயதில் மகள், 17 மற்றும் 18 வயதில் 2 மகன்கள் என மொத்தம் 3 பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை பிள்ளைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அண்டை வீட்டார் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த மருத்துவ ஊழியர்கள் குடும்பத்தினர் 5 பேரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், 5 பேரும் விஷம் குடித்திருப்பதை கண்டறிந்தனர். உடனடியாக 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி தம்பதியான வினு சாகர், அவரது மனைவி கோகிலாபென் உயிரிழந்தார். பிள்ளைகள் 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வினுசாகர் தனது குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் வினுசாகரும் அவரது மனைவியும் உயிரிழந்த நிலையில் பிள்ளைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com