டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா கேதர்நாத், பத்ரிநாத் கோவில்களில் சாமி தரிசனம்

டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா, ஒட்டுமொத்த இந்தியாவும் ஒரு முழு வளர்ச்சியடைந்த நாடாக உருமாற வேண்டும் என வேண்டி கொண்டேன் என்றார்.
டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா கேதர்நாத், பத்ரிநாத் கோவில்களில் சாமி தரிசனம்
Published on

கோபேஷ்வர்,

டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா தன்னுடைய குடும்பத்தினருடன் கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் தம் பகுதிகளுக்கு நேற்று (திங்கட்கிழமை) சென்று சாமி தரிசனம் மேற்கொண்டார். முதல்-மந்திரியாக பதவியேற்று 100 நாட்கள் ஆன நிலையில், அவர் இந்த புனித தலங்களுக்கு சென்று கோவில்களில் வழிபட்டுள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, கடவுள் பத்ரிநாதரை பார்ப்பதற்காக வந்தது எனக்கு கிடைத்த வாய்ப்பு மற்றும் அதிர்ஷ்டம். டெல்லி மற்றும் அதன் மக்களின் வருங்காலத்திற்காக மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவும் ஒரு முழு வளர்ச்சியடைந்த நாடாக உருமாற வேண்டும் என வேண்டி கொண்டேன் என்றார்.

நடப்பு ஆண்டு பிப்ரவரியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், 27 ஆண்டுகளுக்கு பின்னர் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. டெல்லி முதல்-மந்திரியாக, பிப்ரவரி 20-ல் ரேகா குப்தா பதவியேற்று கொண்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com