டெல்லி: கட்டிடத்தில் தீ விபத்து; 4 பேர் பலி

கட்டிடத்தின் தரை தளத்தில் உள்ள காலணி விற்பனை செய்யும் கடையில் இருந்து தீ பரவி இருக்க கூடும் என நம்பப்படுகிறது.
டெல்லி: கட்டிடத்தில் தீ விபத்து; 4 பேர் பலி
Published on

புதுடெல்லி,

தெற்கு டெல்லியில் சங்கம் விகார் பகுதியில் திக்ரி பகுதியில் 4 மாடிகளை கொண்ட கட்டிடம் ஒன்றில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு சென்றனர்.

எனினும், தீ விபத்தில் சிக்கி 3 ஆண்கள் மற்றும் ஒரு பெண் என 4 பேர் பலியானார்கள். அவர்களில் ஒருவர் கட்டிடத்தின் உரிமையாளர் சதேந்தர் (வயது 38) என அடையாளம் காணப்பட்டு உள்ளது.

அந்த பெண், கட்டிட உரிமையாளரின் சகோதரி அனிதா (வயது 40) என தெரிய வந்துள்ளது. சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அதில் பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார். மற்றொரு பெண் உள்பட 2 பேருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது.

கட்டிடத்தின் தரை தளத்தில் உள்ள காலணி விற்பனை செய்யும் கடையில் இருந்து தீ பரவி இருக்க கூடும் என நம்பப்படுகிறது. இதுபற்றி போலீசார் விரிவாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com