புதுச்சேரி சட்டசபையில் சலசலப்பு: தி.மு.க., காங்கிரஸ் உறுப்பினர்கள் குண்டு கட்டாக வெளியேற்றம்

சட்டசபையை 6 மாதங்களுக்கு ஒருமுறை கூட்ட வேண்டும் என்பது விதி.
புதுச்சேரி சட்டசபையில் சலசலப்பு: தி.மு.க., காங்கிரஸ் உறுப்பினர்கள் குண்டு கட்டாக வெளியேற்றம்
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் 10-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி மார்ச் 12-ந் தேதி ரூ.13 ஆயிரத்து 600 கோடிக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 27-ந் தேதி வரை (13 நாட்கள்) மாநில அந்தஸ்து வலியுறுத்தும் அரசு தீர்மானத்தை நிறைவேற்றி காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

சட்டசபையை 6 மாதங்களுக்கு ஒருமுறை கூட்ட வேண்டும் என்பது விதி. அதன்படி இந்த மாதம் (செப்டம்பர்) சட்டசபை கூட்டப்பட வேண்டும். அதன்படி பரபரப்பான அரசியல் சூழலில் புதுச்சேரி சட்டசபையின் 6-வது கூட்டத்தொடரின் 2-வது பகுதி இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. சபையை சபாநாயகர் செல்வம் திருக்குறள் வாசித்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து ஜி.எஸ்.டி. திருத்த மசோதா, எளிய முறையில் தொழில் தொடங்க அனுமதி குறித்து மசோதா தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில்,

புதுச்சேரி சட்டசபையில் இருந்து திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம் செய்யப்பட்டனர். குடிநீரில் கழிவுநீர் கலந்தது குறித்து அவையில் விவாதிக்க திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை வலியுறுத்தி அவையில் முழக்கமிட்டு சபாநாயகரை சூழ்ந்து எம்.எல்.ஏக்கள் கோஷமிட்டனர். சபாநாயகர் அறிவுறுத்தியும் கேட்காத நிலையில் எதிர்க்கட்சி தலைவர் சிவா உள்ளிட்டோர் குண்டுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com