கள்ளக்காதல் விவகாரம்: தீக்குளித்து பெண் தற்கொலை

கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
கள்ளக்காதல் விவகாரம்: தீக்குளித்து பெண் தற்கொலை
Published on

எர்ணாகுளம்,

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி அருகே உள்ள அத்தாணி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவருடைய மனைவி நீது (வயது 35). இவர்களது மகள்கள் ஸ்ரீபத்ரா, ஸ்ரீபாலா. இதற்கிடையே நீதுவுக்கும், ஹெர்பர்ட் நகரில் வசிக்கும் திருமணமான ஒரு வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்ததோடு, தனியாக சந்தித்து வந்தனர்.

இதை அறிந்த இருவீட்டாரும், கள்ளக்காதலை கைவிடுமாறு 2 பேரிடமும் கூறினர். இதற்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக நீதுவும், வாலிபரும் கடந்த சில நாட்களாக செல்போனில் பேசாமல் இருந்து வந்தனர். இதனால் நீது மன உளைச்சல் அடைந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று அவர் கள்ளக்காதலன் வீட்டிற்கு கையில் மண்எண்ணெய் கேனுடன் சென்றார். அங்கு அவருடன் நீது வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தார்.

பின்னர் நீது திடீரென தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதனால் அவரது உடலில் தீ பற்றி எரிந்தது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து தீயை அணைத்து, நீதுவை மீட்டு களமச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிர்ழந்தார்.

இதுகுறித்து காலடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபருடன் பிரச்சினை ஏற்பட்டதால் நீது தீக்குளித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக நீதுவின் கள்ளக்காதலனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com