உத்தர பிரதேசத்தில் மகளை அடித்துக்கொன்று விஷம் குடித்த தந்தை

உத்தர பிரதேசத்தில் மகளை அடித்துக்கொன்றுவிட்டு தந்தை விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் மகளை அடித்துக்கொன்று விஷம் குடித்த தந்தை
Published on

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள அஷ்ரப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்பால். இவர் நேற்று தனது 19 வயது மகளை இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார்.

மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜ்பால் இந்த கொலையை செய்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், மகளை கொலை செய்த பிறகு ராஜ்பால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், ராஜ்பாலை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் உயிரிழந்த இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com