பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை; கடன் தொல்லையால் விபரீதம்

சிவகுமார் கடந்த சில மாதங்களாக அதிக கடன் தொல்லையால் அவதியடைந்து வந்தார்.
பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை; கடன் தொல்லையால் விபரீதம்
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டம் சிக்கமல்லிகாவாத் கிராமத்தை சேர்ந்தவர் நாராயண் (வயது 42). இவருக்கு திருமணமாகி சிவகுமார் (வயது 12) என்ற மகனும், ஸ்ரீநிதி (வயது 11) என்ற மகளும் இருந்தனர். நாராயண்னின் தந்தை விட்டல் (வயது 80). இவரும் நாராயண் உடன் வசித்து வந்தார்.

இதனிடையே, சிவகுமார் கடந்த சில மாதங்களாக அதிக கடன் தொல்லையால் அவதியடைந்து வந்தார். வாங்கிய கடனை கட்டமுடியாமல் திணறி வந்தார்.

இந்நிலையில், சிவகுமார் நேற்று மாலை தனது 2 பிள்ளைகள் மற்றும் தந்தை விட்டலுடன் சேர்ந்து கிராமத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். பிள்ளைகள் இருவரையும் கிணற்றுக்குள் தள்ளிக்கொன்ற சிவகுமார் பின்னர் தனது தந்தை விட்டலுடன் அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

சிவகுமார் குடும்பத்துடன் கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்துகொண்டது இன்று காலை கிராமத்தினருக்கு தெரியவந்துள்ளது. உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் 4 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பிள்ளைகளை கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு தந்தையுடன் அதே கிணற்றில் குதித்து சிவகுமார் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com