

ஆமதாபாத்,
குஜராத்துக்கு 2 நாள் சுற்றுப் பயணம் சென்றுள்ளார் பிரதமர் மோடி. வதோதரா விமான நிலையத்தில் தரையிறங்கிய அவர், பின்னர் மோசமான வானிலை காரணமாக சாலை வழியாக ஏக்தா நகர் சென்றடைந்தார்.
அங்கு நடந்த நிகழ்வில் ரூ.30 கோடி செலவில் வாங்கப்பட்ட 25 மின்சார பஸ்களை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் ரூ.56.33 கோடி செலவில் கட்டப்பட்ட அரசு குடியிருப்புகள், ரூ.303 கோடிபிர்சா முண்டா பவன், ரூ.54.65 கோடி விருந்தினர் இல்லம் உள்ளிட்ட நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தார்.
மேலும் ரூ.367.25 கோடி செலவில் கட்டப்படும் அரசுகளின் அருங்காட்சியகம், ரூ.23.60 கோடி விளையாட்டு வளாகம் உள்ளிட்ட பத்து முக்கிய மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மொத்தம் ரூ.1,220 கோடி திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.