கன மழை எதிரொலி: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வேன்

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வேன் சிறிது தூரத்தில் தலை கீழாக கரை ஒதுங்கி கிடந்தது.
கன மழை எதிரொலி: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வேன்
Published on

மூணாறு,

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், நெடுங்கண்டம் பகுதியில் நேற்று இரவு கன மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நெடுங்கண்டம் கல்லார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருந்தது. அப்போது கரையோரம் நிறுத்தியிருந்த வேன் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதிர்ஷ்டவசமாக வேனில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

இதற்கிடையே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வேன் சிறிது தூரத்தில் தலை கீழாக கரை ஒதுங்கி கிடந்தது. இதேபோல் கன மழை காரணமாக நெடுங்கண்டம் பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com