வரதட்சணையாக 1 ரூபாயும், 1 தேங்காயும் ஏற்றுக்கொண்ட மணமகன்: மணமகள் வீட்டார் நெகிழ்ச்சி

திருமணத்தின்போது மணமகள் வீட்டார் வரதட்சணையாக கொடுத்த ரூ.5 லட்சத்தை அவர்களிடமே திருப்பி அளித்து விட்டார் மணமகன் பரம்வீர் ரத்தோர்.
வரதட்சணையாக 1 ரூபாயும், 1 தேங்காயும் ஏற்றுக்கொண்ட மணமகன்: மணமகள் வீட்டார் நெகிழ்ச்சி
Published on

ஜெய்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த ஒரு திருமணத்தின் போது, மணமகனுக்கு வரதட்சணையாக ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் பணம் ரொக்கமாக அளிக்கப்பட்டன. அதில் ஒரே 1 ரூபாயும் ஒரு தேங்காயையும் மட்டும் எடுத்துக் கொண்டு, மீதி பணத்தை மணமகள் வீட்டாரிடம் மணமகன் திருப்பி கொடுத்த சம்பவம் மணமகள் வீட்டாரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் பரம்வீர் (வயது 33) என்பவர் நிகிதா பாடி (வயது 28) என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி இவர்களது திருமணம் நடந்த நிலையில், மணமகள் வீட்டார் சார்பில் 5 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக மணமகன் வீட்டாரிடம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த வரதட்சணை பணத்தை விரும்பாத மணமகன், அதில் இருந்து ஒரே ஒரு ரூபாயும், ஒரு தேங்காயும் எடுத்துக் கொண்டு, மீதி பணத்தை மணமகள் வீட்டாரிடம் திருப்பி கொடுத்து விட்டார்.

வரதட்சணை பணத்தை நீங்கள் கொடுக்க வந்த போது, இந்த சமூகத்தில் வரதட்சணை இருப்பதை எண்ணி வருத்தம் அடைந்தேன். இருப்பினும் நீங்கள் அன்பாக கொடுக்க முன் வந்ததை என்னால் நிராகரிக்க முடியவில்லை. அதனால் நான் அந்த பணத்தில் இருந்து ஒரே ஒரு ரூபாய் மட்டும் எடுத்துக் கொள்கிறேன். படித்தவர்களே இதுபோன்ற செயலை செய்யாவிட்டால், வேறு யார் வந்து இதனை மாற்றுவார்கள்.  அனைவருக்கும் நாம் ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அவருடைய இந்த பதிலை கேட்டு, மணமகள் விட்டார் நெகிழ்ச்சி அடைந்தனர். திருமணத்தின் போது, வரதட்சணை வாங்கக்கூடாது என்று இன்றைய இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடந்த இந்த திருமணம், குறித்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com